பல்வேறு பிரச்சினைகள் காரணமாக மொபைல் அப்பிளிக்கேஷன்கள் தடை செய்யப்படுவது தற்போது அதிகரித்துள்ளது.
இந்த வரிசையில் சீன அப்பிளிக்கேஷன்களில் ஒன்றான Clean Master இந்தியாவில் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பதிலாக விரைவில் MIUI Cleaner எனப்படும் அப்பிளிக்கேஷன் அறிமுகம் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை Xiaomi நிறுவனம் தனது மொபைல் சாதனங்களைப் பயன்படுத்தும் பயனர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தெரிவித்துவருகின்றது.
மொபைல் சாதனங்களில் ஏற்கணவே நிறுவப்பட்ட நிலையில் சில அப்பிளிக்கேஷன்கள் தரப்பட்டிருக்கும்.
இவ்வாறு இனிவரும் காலங்களில் Clean Master நிறுவப்பட்டிருக்காது எனவும், பதிலாக MIUI Cleaner நிறுவப்பட்டிருக்கும் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.