அண்மையில் டுவிட்டர் பயனர்கள் 130 பேரின் கணக்குகளை ஹேக்கர்கள் கைவரிசைக்குட்படுத்தியது பாரிய அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
காரணம் முதன் முறையாக பயனர்களின் தரவுகளை அவர்கள் தரவிறக்கம் செய்துகொண்டமையாகும்.
அந்த அளவிற்கு டுவிட்டர் தளத்தில் குறைபாடு காணப்படுகின்றதா என் அச்சம் தற்போது அதிகரித்துள்ளது.
ஹேக்கர்கள் குறித்த கணக்குளின் கடவுச்சொற்களை மாற்றியுள்ளதுடன் அவர்களில் 45 பேரின் கணக்குகளை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
அதுமாத்திரமன்றி குறித்த 45 கணக்குகளிலிருந்தும் Retweet செய்தும் உள்ளனர்.
இவர்களில் 8 நபர்களின் கணக்குகளில் இருந்து அவர்களின் தரவுகளை தரவிறக்கம் செய்துள்ளனர்.
இவர்களின் கணக்குகள் Verify செய்யப்படாமையே காரணமகும்.
இந்த கைவரிசையின்போது ஹேக்கர்கள் அமெரிக்காவின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பிடென், தொலைக்காட்சி நட்சத்திரும் கிம் கதர்சியன், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா மற்றும் எலன் மொஸ்க் ஆகியவர்களின் கணக்குகளையும் விட்டுவைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.