வாட்ஸ் ஆப் பயனர்களுக்கு இதை செய்ய வேண்டாம் என எச்சரிக்கை விடுப்பு

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்
298Shares

இன்றைய காலத்தில் வாட்ஸ் ஆப் செயலியானது மிகவும் முக்கியமான செயலிகளுள் ஒன்றாக காணப்படுகின்றது.

அன்ரோயிட் மற்றும் iOS சாதனங்களில் பயன்படுத்தக்கூடியதாக இருக்கும் இந்த அப்பிளிக்கேஷன்களின் ஊடாக அவ்வப்போது தகவல் திருட்டுக்களும் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் அன்ரோயிட் சாதனங்களில் பயன்படுத்தும் அப்பிளிக்கேஷனில் மாற்றங்களை ஏற்படுத்தவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சில பயனர்கள் தமது மொபைல் சாதனங்களில் வாட்ஸ் ஆப் செயலியினை தமக்கு ஏற்றாற்போல் சில மாற்றங்களை செய்து பயன்படுத்துகின்றனர்.

இவ்வாறானவர்களுக்கே குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தின் ஊடாக WABetaInfo இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.

அத்துடன் வாட்ஸ் ஆப்பில் மாற்றங்களை ஏற்படுத்தி பயன்படுத்துபவர்கள் உடனடியாக புதிய பதிப்பினை தரவிறக்கம் செய்து பயன்படுத்துமாறும் கோரப்பட்டுள்ளது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்