அமேஷான், பிளிப்கார்ட் மற்றும் வாட்ஸ் ஆப் என்பற்றிற்கு தடை: எங்கு தெரியுமா?

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

இந்திய கடற்படை ஆனது சமூகவலைத்தளங்கள் மற்றும் மின் வணிக இணையத்தளங்கள் என்பவற்றினை தடை செய்துள்ளது.

ஏற்கனவே பேஸ்புக் வலைத்தளத்தினை தனிப்பட்ட பயன்பாட்டிற்கு தடை செய்திருந்த நிலையிலேயே இப் புதிய தடை அமுலுக்கு வருகின்றது.

இதன்படி வாட்ஸ் ஆப், அமேஷான் மற்றும் பிளிப்காட் போன்ற ஏனைய தளங்களின் மீதும் தடை அமுல்ப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் பணியில் உள்ள இராணுவத்தினருக்கே இவற்றினைப் பயன்படுத்துவதற்கான தடை விதிக்கப்படுகின்றது.

தவிர துறைமுகப்பகுதிகள் மற்றும் யுத்தக் கப்பல்கள் என்பவற்றில் பணியாற்றுபவர்கள் கைப்பேசிகளைப் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்க கடற்படையானது TikTok செயலியை இராணுவத்தினர் பயன்படுத்த தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...