Clips அப்பிளிக்கேஷனில் Memoji மற்றும் Animoji: அறிமுகம் செய்தது ஆப்பிள்

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

Clips என்பது மொபைல் சாதனங்களில் வீடியோ எடிட்டிங் செய்வதற்காக ஆப்பிள் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட ஒரு அப்பிளிக்கேஷன் ஆகும்.

இந்த அப்பிளிக்கேஷனில் Memoji மற்றும் Animoji என்பவற்றினை பயன்படுத்தக்கூடிய வசதியினை ஆப்பிள் இப்போது பயனர்களுக்கு அளித்துள்ளது.

Memoji மற்றும் Animoji என்பன முதலில் iOS சாதனங்களின் மெசேஜ் அப்பிளிக்கேஷனில் கொடுக்கப்பட்டிருந்த அனிமேஷன் ஸ்டிக்கர்கள் ஆகும்.

இந்நிலையிலேயே தற்போது Clips அப்பிளிக்கேஷனிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Clips 2.1 பதிப்பில் இவ் வசதியினைப் பயனர்கள் பெற முடியும்.

எவ்வாறெனினும் iPhone 6s மற்றும் iPhone SE இவற்றிற்கு பின்னர் அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன்களிலும், iPad Air 2, iPod போன்றனவற்றிலும், iOS 3, iPadOS 13 ஆகிய இயங்குதளங்களில் செயற்படும் சாதனங்களிலேயே Memoji மற்றும் Animoji என்பவற்றினை தற்போது பயன்படுத்த முடியும்.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்