வாட்ஸ் ஆப்பில் வீடியோ அனுப்பி பயனர்களின் தகவல்களை திருடும் ஹேக்கர்கள்

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

MP4 வகை வீடியோக்களை வாட்ஸ் ஆப்பிற்கு அனுப்பி அதன் மூலம் பயனர்களின் தகவல்கள் திருடப்படுவதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

MP4 வீடியோக்கள் ஏனைய சாதாரண வீடியோக்கள் போன்றே செயற்படும்.

இவ்வாறு செயற்படும்போது பின்னணியில் ஹேக்கர்கள் விசேட புரோகிராமினைப் பயன்படுத்தி தகவல்களை திருகின்றனர்.

அன்ரோயிட் மற்றும் iOS சாதனங்கள் இரண்டிலும் இவ்வாறு திருட்டு இடம்பெறுகின்றது.

இதனை தற்போது பேஸ்புக் நிறுவனமும் ஏற்றுக்கொண்டுள்ளது.

இப் பிரச்சினையிலிருந்து தப்பித்துக்கொள்ள வாட்ஸ் ஆப்பின் புதிய பதிப்பினை அப்டேட் செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே அன்ரோயிட் பயனர்கள் 2.19.274 எனும் வாட்ஸ் ஆப் பதிப்பினையும், iOS பயனர்கள் 2.19.100 எனும் வாட்ஸ் ஆப் பதிப்பினையும் அப்கிரேட் செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...