Android மற்றும் iOS சாதனங்களுக்காக வாட்ஸ் ஆப் அறிமுகம் செய்யும் புதிய வசதி

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

வாட்ஸ் ஆப் ஆனது தொடர்ச்சியாக புதிய வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றது.

இவ்வாறு வாட்ஸ் ஆப் அறிமுகம் செய்யும் புதிய வசதிகளை கண்காணித்து அவற்றினை பயனர்களுக்கு தெரிவிப்பதில் WABetaInfo முக்கிய பங்கு வகிக்கின்றது.

WABetaInfo வெளியிட்டுள்ள புதிய தகவலின்படி Android மற்றும் iOS சாதனங்களுக்காக வாட்ஸ் ஆப்பில் புதிய வசதி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஒன்றிற்கு மேற்பட்ட சாதனங்களில் ஒரே வாட்ஸ் ஆப் கணக்கினை பயன்படுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இவ் வசதியானது ஹேக்கர்கள் பயனர் ஒருவரின் கணக்கினை வேறு சாதனங்களில் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஏற்படுத்தியுள்ளது.

அவ்வாறு வேறுநபர்கள் ஒருவரது கணக்கினை பயன்படுத்த முனைந்தால் உரிய நபருக்கு வாட்ஸ் ஆப்பில் எச்சரிக்கை செய்தி அனுப்பப்படும்.

அதேபோன்று ஒரு நபரை வாட்ஸ் ஆப்பில் ஒன்றிற்கு மேற்பட்டவர்கள் ப்ளாக் (Block) செய்தால் அவர்கள் அனைவரது கணக்குகளையும் ஒரே குழுவின் (Group) கீழ் காண்பிக்கும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers