இன்ஸ்டாகிராமின் நேரடி மெசேஜ் அப்பிளிக்கேஷன்

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

சுமார் ஒரு பில்லியனிற்கும் மேலான பயனர்களைக் கொண்ட ஒரு சேவையாக இன்ஸ்டாகிராம் காணப்படுகின்றது.

புகைப்படங்கள், சிறிய வீடியோக்கள் என்பவற்றினை பதிவேற்றக்கூடிய இச் சேவையில் ஸ்டோரிகளையும் பதிவிட முடியும்.

இப்படியான நிலையில் இச் சேவைக்கென தனியான மெசேஜ் அப்பிளிக்கேஷன் ஒன்று கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

இவ்வாறு அறிமுகம் செய்யப்பட்டு ஒரு மாதம் கடந்துள்ள நிலையில் இதுவரை உலகெங்கிலும் 3.7 இலட்சம் தடவைகள் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளன.

அதிகபட்சமாக அமெரிக்காவில் மாத்திரம் 1.6 இலட்சம் தடவைகள் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளன.

குறித்த அப்பிளிக்கேஷனை அதிக தடவைகள் தரவிறக்கிய நாடுகள் வரிசையில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது.

அதாவது 37,400 தடவைகள் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளன.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்