ஒன்லைனில் இலகுவாக பொருட்களை கொள்வனவு செய்ய வாட்ஸ் ஆப்பில் புதிய வசதி

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்
107Shares

வியாபார நோக்கம் கருத்தி வாட்ஸ் ஆப் நிறுவனத்தினால் Whatsapp Business எனும் அப்பிளிக்கேஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளமை தெரிந்ததே.

இந்த அப்பிளிக்கேஷனில் தற்போது புதிய வசதி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி ஒன்லைனில் பொருட்கள் வாங்குவதை பயனர்களுக்கு இலகுபடுத்திக்கொடுக்கப்பட்டுள்ளது.

இவ் வசதியானது Catalog என அழைக்கப்படுகின்றது.

தற்போது இந்தியா, பிரேசில், ஜேர்மனி, இந்தோநேசியா, மெக்ஸிக்கோ, ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் இவ் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

விரைவில் ஏனைய நாடுகளிலும் இவ் வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளது.

Android மற்றும் iOS சாதனங்களில் இரண்டிலும் இவ் வசதி கிடைக்கப்பெறுகின்றது.

மேலும் Catalog வசதியை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பான டெமோ வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.

அவ் வீடியோவை இங்கே காணலாம்.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்