கூகுள் பிளே ஸ்டோரில் மாயமான வாட்ஸ் ஆப்: இனி அன்ரோயிட்டில் பயன்படுத்தவே முடியாதா?

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

அன்ரோயிட் சாதனங்களுக்கான அப்பிளிக்கேஷன்களை தரவிறக்கம் செய்யும் கூகுள் பிளே ஸ்டோரில் WhatsApp என தேடும்போது குறித்த அப்பிளிக்கேஷன் காண்பிக்கப்படவில்லை.

பதிலாக WhatsApp Business அப்பிளிக்கேஷனையே காண்பிக்கின்றது.

இதனால் WhatsApp எனும் பிரதான மெசஞ்சர் அப்பிளிக்கேஷனை அன்ரோயிட் சாதனங்களில் நிறுவ முடியாது என்று பொருள் அல்ல.

மாறுபட்ட முறையில் குறித்த அப்பிளிக்கேஷனை நிறுவ முடியும்.

அதாவது தேடும் பட்டையில் WhatsApp என தட்டச்சு செய்ய ஆரம்பிக்கும்போது சில முடிவுகளை தானாகவே காண்பிக்கும்.

அம் முடிவுகளில் காண்பிக்கப்படும் WhatsApp Messenger என்பதை தெரிவு செய்து தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

வெவ்வேறு அன்ரோயிட் சாதனங்களில் பரீட்சிக்கப்பட்டபோது இப் பிரச்னை கண்காணிக்கப்பட்டுள்ளது.

எனினும் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து வாட்ஸ் ஆப் அப்பிளிக்கேஷன் நீக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்