பேஸ்புக் வெளியிட்டுள்ள மற்றுமொரு சாதனைத் தகவல்

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

உலக அளவில் முன்னணி சமூகவலைத்தளமாக காணப்படும் பேஸ்புக்கினை வியாபார நிறுவனங்கள் தமது விளம்பரங்களுக்காகவும் பயன்படுத்தி வருகின்றன.

இது தொடர்பாக தற்போது புதிய தகவல் ஒன்றினை பேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதன்படி மாதம் தோறும் சுமார் 140 மில்லியன் வரையான வியாபாரங்கள் தொடர்பில் பேஸ்புக் வலைத்தளம் மற்றும் அதன் அப்ளிக்கேஷன்கள் உலகளவில் பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.

வாடிக்கையாளர்களை நெருங்குவதற்கு மிகவும் பொருத்தமான இடமாக பேஸ்புக் திகழ்வதால் அதிகளவு எண்ணிக்கையில் வியாபார நிறுவனங்கள் விளம்பரங்களை மேற்கொண்டு வருகின்றன.

இதேவேளை விளம்பரதாரர்களை மேலும் ஈர்க்கும்பொருட்டு உலக அளவில் 17 பாரிய அலுவலகங்களை திறப்பதற்கு பேஸ்புக் நிறுவனம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்