இன்ஸ்டாகிராமிற்காக அறிமுகம் செய்யப்பட்ட புதிய அப்பிளிக்கேஷன்

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

புகைப்படங்கள் மற்றும் சிறிய அளவிலான வீடியோ கோப்புக்கள் என்பவற்றினை பகிர்ந்து மகிழ உதவும் சேவையாக இன்ஸ்டாகிராம் காணப்படுகின்றது.

இச் சேவையினை இன்று பல மில்லியன் கணக்கானவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இப் பயனர்கள் ஏனையவர்களுடன் கட்புல ஊடகம் மூலம் இணைந்திருப்பதற்கு ஏற்கனவே சில வசதிகள் இன்ஸ்டாகிராமில் தரப்பட்டுள்ளன.

இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராமுடன் இணைத்து பயன்படுத்தக்கூடிய முதலாவது கமெரா அப்பிளிக்கேஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளத.

குறித்த அப்பிளிக்கேஷன் Threads எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்த தகவலை பேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்