YouTube Music தொடர்பில் வெளியான புதிய தகவல்

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

கூகுள் நிறுவனமானது தனது அன்ரோயிட் இயங்குதளத்தில் தான் வழங்கும் சேவைகள் தொடர்பான அப்பிளிக்கேஷன்களை ஏற்கனவே உள்ளடக்குகின்றமை வழக்கமாகும்.

இதனால் பயனர்கள் குறித்த அப்பிளிக்கேஷன்களை தனியாக நிறுவ வேண்டிய அவசியம் இருக்காது.

இவற்றில் ஜிமெயில், கூகுள் குரோம், கூகுள் மேப், யூடியூப் போன்ற மேலும் சில சேவைகளின் அப்பிளிக்கேஷன்களும் அடங்கும்.

அதேபோன்று தற்போது YouTube Music சேவைக்கான அப்பிளிக்கேஷனையும் ஏற்கனவே உள்ளடக்கியவாறு அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரையில் இந்த அப்பிளிக்கேஷனை தனியாகவே பயனர்கள் பிளே ஸ்டோரிலிருந்து நிறுவவேண்டியிருந்தது.

எனினும் கூகுளின் அன்ரோயிட் 10 இயங்குதளத்தில் YouTube Music அப்பிளிக்கேஷன் உள்ளடக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers