தகவல் மற்றும் பணம் திருடும் 29 அப்பிளிக்கேஷன்கள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கம்

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்
82Shares

கூகுளின் அன்ரோயிட் இயங்குதளத்திற்கான அப்பிளிக்கேஷன்களை எவரும் பிளே ஸ்டோரில் தரவேற்றம் செய்ய முடியும் என்பது தெரிந்ததே.

இதனை சாதகமாகப் பயன்படுத்தி தகவல் மற்றும் பணம் திருடும் அப்பிளிக்கேஷன்கள் உருவாக்கப்பட்டு தரவேற்றம் செய்யப்படுகின்றன.

இதனை தரவிறக்கம் செய்து பயன்படுத்தும் பயனர்கள் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் Quick Heal Security Labs மேற்கொண்ட ஆய்வில் கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள பணம் மற்றும் தகவல் திருடும் 29 அப்பிளிக்கேஷன்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை அடுத்து குறித்த அப்பிளிக்கேஷன்களை பிளே ஸ்டோரிலிருந்து கூகுள் நிறுவனம் நீக்கியுள்ளது.

மேலும் இந்த அப்பிளிக்கேஷன்கள் அனைத்தும் சுமார் 10 மில்லியன் தடவைகளுக்கு மேல் தரவிறக்கம் செய்யப்பட்டு நிறுவப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்