வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸினை பேஸ்புக்கில் ஷேர் செய்வது எப்படி?

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

இவ் வருடத்தின் ஆரம்பத்தில் வாட்ஸ் ஆப்பினையும், பேஸ்புக்கினையும் இணைக்கும் ஓர் வசதி அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி கடந்த வாரம் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸினை பேஸ்புக்கில் ஷேர் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

பேஸ்புக்கில் மாத்திரமன்றி இன்ஸ்டாகிராமிலும் ஷேர் செய்யக்கூடியதாக இருக்கின்றது.

இந்நிலையில் பேஸ்புக்கில் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸினை ஷேர் செய்வது எப்படி என பார்க்கலாம்.

முதலில் வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸ் ஒன்றினை ஷேர் செய்ய வேண்டும்.

அதன் பின்னர் குறித்த ஸ்டேட்டஸில் சிறிது நேரம் அழுத்திப்பிடிக்கவும்.

அப்போது வலதுபக்கத்தில் தோன்றும் 3 புள்ளிகளில் மீண்டும் அழுத்தவும்.

அதில் Share to Facebook எனும் தெரிவினை அழுத்தவும்.

இப்போது பேஸ்புக்கில் ஷேர் செய்வதற்கான அனுமதியை வாட்ஸ் ஆப் கேட்கும்.

அப்போது Open தெரிவினை கிளிக் செய்து Share Now என்பதை தெரிவு செய்யவும்.

இப்போது வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸானது பேஸ்புக்கில் ஷேர் செய்யப்பட்டிருக்கும்.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்