இன்ஸ்டாகிராமின் அதிரடி முடிவு: இனி இவ்வாறான போஸ்ட்களை பதிவேற்ற முடியாது

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

புகைப்படங்கள் மற்றும் சிறிய அளவிலான வீடியோக்கள் என்பவற்றினை பகிர்ந்து மகிழும் தளமாக இன்ஸ்டாகிராம் விளங்குகின்றது.

பேஸ்புக் நிறுவனத்தினால் நிர்வகிக்கப்பட்டுவரும் இச் சேவையில் தற்போது அதிரடி மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதன்படி இனிவரும் காலங்களில் அழகுசாதனப் பொருட்கள் தொடர்பான போஸ்ட்கள் மற்றும் டயட் தொடர்பான போஸ்ட்கள் என்பவற்றினை பதிவேற்றம் செய்ய முடியாது.

அவ்வாறு மீறி பதிவேற்றம் செய்யப்பட்டால் அப் பதிவுகள் உடனடியாக நீக்கப்படும்.

இன்ஸ்டாகிராமில் சாதகமானதும், பாதகமானதுமான பதிவுகள் தொடர்ந்தும் பதிவேற்றம் செய்யப்பட்டு வந்துள்ளன.

குறிப்பாக 18 வயதிற்கு கீழானவர்களுக்கு பாதகத்தை ஏற்படுத்தக்கூடிய பதிவுகள் அதிகம் இடம்பெற்று வந்துள்ளன.

அழகுசாதன பொருட்கள் மற்றும் உடல் குறைப்பு தொடர்பான பதிவுகள் 18 வயதிற்கு கீழுள்ளவர்களையும் இலக்குவைத்து விளம்பரப்படுத்தப்பட்டு வந்துள்ளது.

இதனையடுத்தே இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்