வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் தொடர்பில் அறிமுகமான புதிய வசதி பற்றி தெரியுமா?

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

மெசஞ்சர் அப்பிளிக்கேஷன்களில் மிகவும் பிரபல்யமான வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸ் வைக்கும் வசதி தரப்பட்டுள்ளமை அனைவரும் அறிந்ததே.

இதில் தற்போது மற்றுமொரு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதாவது வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸினை பேஸ்புக் ஸ்டோரி அல்லது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியாக ஷேர் செய்துகொள்ள முடியும்.

இவ் வசதியினை iOS மற்றும் Android ஆகிய இரு வகையான சாதனங்களிலும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

இவ் வசதி மூலம் வாட்ஸ் ஆப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என்பவற்றில் தனித்தனியே பதிவு மேற்கொள்வதை தவிர்க்க முடியும்.

அதாவது முதலில் வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸாக பதிவேற்றம் செய்த பின்னர் அதனை பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துகொள்ள முடியும்.

இதற்கு மேலாக வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸினை ஜிமெயில் மற்றும் கூகுள் போட்டோஸ் என்பவற்றிலும் ஷேர் செய்துகொள்ளக்கூடியதாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்