ஐ.பி.சி தமிழின் சாதனை பயணத்தின் அடுத்த பரிணாமம்! இனி உலகத்தமிழர்களின் கைகளில்

Report Print Arbin Arbin in ஆப்ஸ்

உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்கள் அனைவரையும் ஐ.பி.சி தமிழின் தொலைக்காட்சி, வானொலி, இணையத்தளம் ஊடாக ஒன்றிணைக்கும் ஓர் உறவுப்பாலமாக தமிழ் உறவுகளின் மனதில் தனக்கென ஒரு தடம் பதித்துள்ள நிலையில், மேலும் ஒரு புதிய பரிணாமத்தில் உங்கள் கைகளிலேயே கிடைக்கப்பெறவுள்ளது.

அந்த வகையில், ஐ.பி.சி தமிழ் புதிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலியை தரவிறக்கம் செய்வதன் மூலம் பல முக்கிய தகவல்களை இலவசமாக பெறமுடியும்.

அதுமட்டுமன்றி ஈழத்தமிழர் வரலாற்றில் பல முக்கிய சாதனைகளைப் படைத்த ஐ.பி.சி தமிழ் ஊடகமானது தற்போது இந்த புதிய செயலி மூலமும் மக்களுக்கு இலகுவானதும் பல நவீன வசதிகளையும் உட்புகுத்தி கைத்தொலைபேசி, கணனி மற்றும் ஐபாட் போன்றவற்றில் இந்த செயலியூடாக சகல விடயங்களையும் இலகுவாகவும் விரைவாகவும் பெற்றுக்கொள்ள முடியும்.

அதுமாத்திரமன்றி, 14 நாட்களுக்கு பிந்திய தகவல்களையும் இலகுவான முறையில் பார்வையிடுவதற்கான இலகு வழிமுறையும் உள்ளது.

எதிர்வரும் காலங்களில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மிக இலகுவான முறையில் இணைய வசதியூடாக உங்கள் கைத்தொலைபேசியிலேயே பார்வையிட முடியும்.

இந்த செயலியை உங்கள் அனைவரின் ஒத்துழைப்பின் மூலம் ஐ.பி.சி தமிழ் தொலைகாட்சி உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எமது செயலியை தரவிறக்கம் செய்வதற்கு கீழுள்ள இணைப்பை தொடருங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.ibctamil.app

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்