சந்தாக்களை தானாகவே நீக்கும் அப்பிளிக்கேஷன் உருவாக்கம்

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

இணையத்தில் வழங்கப்படும் பல்வேறு வகையான சேவைகளுக்கு சந்தாதாரர் ஆக வேண்டும் என்பது தெரிந்ததே.

எனினும் சில சேவைகள் ஒரு மாத காலம் வரையில் இலவசமாக வழங்கப்படும்.

அதன் பின்னர் சந்தாதாரர் ஆகியே குறிப்பிட்ட சேவைகளை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்.

அவ்வாறு சந்தாதாரர் ஆகாவிட்டால் தொடர்ச்சியாக மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டுவரும்.

இப் பிரச்னையில் இருந்து விடுபடுவதற்கான அப்பிளிக்கேஷன் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

ஜோஸ் ப்ரோடர் எனும் இளைஞனே இந்த அப்பிளிக்கேஷனை உருவாக்கியுள்ளார்.

தற்போது ஐக்கிய இராச்சியத்தில் குறித்த அப்பிளிக்கேஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை 10,000 பயனர்கள் அதனை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

இலவசமாக பயன்படுத்தும் காலம் முடிந்தவுடன் தானாகவே சந்தாக்களை நீக்கக்கூடிய வகையில் குறித்த அப்பிளிக்கேஷன் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்