குழந்தைகளில் ஏற்படும் திடீர் நோய்களை கண்டறிய புதிய ஆப்

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

ஸ்மார்ட் கைப்பேசியின் வரவினை தொடர்ந்து பயனர்களுக்கு பல்வேறு வழிகளில் பயன்தரக்கூடிய அப்பிளிக்கேஷன்களும் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக தற்போது குழந்தைகளில் ஏற்படக்கூடிய திடீர் நோய்களை பெற்றோர்கள் இலகுவாக கண்டறியக்கூடிய அப்பிளிக்கேஷன் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இது உடனடியாக பதில் நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவியாக இருக்கும்.

இந்த அப்பிளிக்கேஷனை மைக்ரோசொப்ட் நிறுவன பணியாளரான Roberto D'Angelo என்பவர் தனது சகபாடிகளுடன் இணைந்து உருவாக்கியுள்ளார்.

மூன்று வயதாக இருக்கும்போது தனது மகன் எதிர்கொண்ட நோய் நிலைமைகளை கருத்தில்கொண்டு குறித்த அப்பினை Roberto D'Angelo உருவாக்கியுள்ளார்.

குறித்த அப்பிளிக்கேஷளில் தரவுகளை காட்புலப்படுத்தும் தொழில்நுட்பம் மற்றும் இயந்திரவழி கற்றல் தொழில்நுட்பம் என்பன பயன்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்