To Do: மைக்ரோசொப்ட் அறிமுகம் செய்துள்ள புதிய அப்பிளிக்கேஷன்

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

மைக்ரோசொப்ட் நிறுவனமானது தற்போது To Do எனும் அப்பிளிக்கேஷனை அறிமுகம் செய்துள்ளது.

இந்த அப்பிளிக்கேஷனின் உதவியுடன் அன்றாம் நடைமுறைப்படுத்த வேண்டிய விடயங்களை நினைவூட்டிக்கொள்ள முடியும்.

இந்நிறுவனம் ஏற்கணவே 2015 ஆம்ஆண்டின் பிற்பகுதியில் Wunderlist எனும் அப்பிளிக்கேஷனை அறிமுகம் செய்திருந்தது.

இந்நிலையில் Wunderlist அப்பிளிக்கேஷனுக்கு மாற்றீடாகவே To Do அப்பிளிக்கேஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இப் புதிய அப்பிளிக்கேஷன் ஆனது புதிய வடிவமைப்பினை கொண்டுள்ளதுடன், பல புதிய அம்சங்களையும் உள்ளடக்கியுள்ளது.

உதாரணமாக Header பகுதியானது சிறியதாக குறைக்கப்பட்டுள்ள அதேவேளை அப்பிளிக்கேஷனின் பின்னணியை பல வர்ணங்களில் மாற்றியமைக்கக்கூடியவாறும் காணப்படுகின்றது.

தவிர Android, Windows மற்றும் Mac சாதனங்களில் இதனைப் பயன்படுத்தக்கூடியதாக இருப்பதுடன் அவற்றில் Dark Mode இற்கு மாற்றிக்கொள்ளவும் முடியும்.

இதேவேளை விரைவில் iOS சாதனங்களுக்கான பதிப்பும் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers