இந்த அப்பிளிக்கேஷனை பிளே ஸ்டோரிலிருந்து கூகுளே நீக்கிவிட்டது: நீங்கள் நீக்கிவிட்டீர்களா?

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

இந்த வாரத்தின் ஆரம்பத்தில் கூகுள் நிறுவனமானது தனது பிளே ஸ்டோரிலிருந்து CamScanner எனும் அப்பிளிக்கேஷனை அதிரடியாக நீக்கியிருந்தது.

இந்த அப்பிளிக்கேஷனில் மல்வேர் உள்ளடக்கப்பட்டிருந்தமையே இதற்கு காரணமாகும்.

எனவே குறித்த அப்பிளிக்கேஷனை தமது ஸ்மார்ட் கைப்பேசிகளில் நிறுவியுள்ள பயனர்கள் உடனடியாக அதனை நீக்கியாக வேண்டும்.

CamScanner அப்பிளிக்கேஷனில் மல்வேர் இருப்பதை Kaspersky Lab ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருந்தனர்.

இதேவேளை விரைவில் பயனர்களுக்காக CamScanner அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு அறிமுகம் செய்யப்படும் எனவும் கூகுள் தெரிவித்துள்ளது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்