சீனாவை சேர்ந்த பல கணக்குகளை நீக்கியது டுவிட்டர்

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்கள் அண்மைக்காலமாக பல கணக்குகளை நீக்கி வருகின்றன.

போலித்தகவல்களை பரப்புதல், வெறுக்கத்தக்க தகவல்களை பகிருதல் போன்ற காரணங்களுக்காக இவ்வாறு கணக்குகள் நீக்கப்பட்டு வருகின்றன.

இவற்றின் தொடர்ச்சியாக தற்போது டுவிட்டர் நிறுவனம் சீனாவை சேர்ந்த பல கணக்குகளை நீக்கியுள்ளது.

ஹொங்ஹொங் தொடர்பாக போலியான செய்திகளை பரப்பியதன் காரணமாகவே இவ்வாறு கணக்குகள் நீக்கப்பட்டுள்ளன.

சுமார் 936 கணக்குகள் இதன்போது நீக்கப்பட்டுள்ளன.

இதேவேளை பேஸ்புக், டுவிட்டர் நிறுவனங்கள் போலித்தகவல்கள், வெறுக்கத்தக்க தகவல்கள் என்பன பரப்பப்படுவதை ஆரம்பத்திலேயே தடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்