புதிய வசதி தொடர்பில் பரீட்சிக்கும் பேஸ்புக்

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

உலக அளவில் அதிக பயனர்களைக் கொண்ட சமூகவலைத்தளமாக பேஸ்புக் விளங்குகின்றது.

இத் தளத்தில் நாள்தோறும் பல பில்லியன் கணக்கான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தரவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.

இவ் வசதிகள் அனைத்தும் இலவசமாகும்.

இதேவேளை Facebook Watch எனும் தனியான வீடியோ சேவையினையும் பேஸ்புக் வழங்கிவருகின்றது.

இதன் ஊடாக எதிர்காலத்தில் கட்டணம் செலுத்தப்பட்ட சந்தா சேவையினை வழங்க பேஸ்புக் நிறுவனம் எதிர்பார்த்துள்ளது.

இதற்கான சோதனைகள் தற்போது இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது வெற்றியளிப்பின் மாதாந்தம் 4.99 டொலர்கள் எனும் ஆரம்ப கட்டணத்தில் இருந்து பல்வேறு கட்டண வசதிகளைக் கொண்ட சேவை பயன்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்