டுவிட்டர் தளத்தின் பழைய தோற்றத்தினை மீண்டும் பெறுவது எப்படி?

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

பொதுவாக ஒன்லைன் அப்பிளிக்கேஷன்களின் தோற்றம் குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை மாற்றப்பட்டு வருகின்றமை வழக்கமானதாகும்.

எனினும் பழைய தோற்றங்களில் உள்ள அப்பிளிக்கேஷன்களை பயன்படுத்தி நன்றாக பழக்கப்பட்டவர்கள் புதிய தோற்றங்களை பயன்படுத்துவதற்கு சற்று தயக்கம் காட்டுவார்கள்.

இதேபோன்றே டுவிட்டர் தளமும் தனது பழைய தோற்றத்தை மாற்றி புதிய தோற்றத்தினை ஏற்கனவே அறிமுகம் செய்திருந்தது.

இத் தோற்றத்தினை பயன்படுத்த விரும்பாதவர்கள் மீண்டும் பழைய தோற்றத்தினை பயன்படுத்துவதற்கான வசதி காணப்படுகின்றது.

இதற்காக GOODTWITTER எனும் நீட்சி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதனை குரோம் உலாவிகளுக்காக குரோம் வெப் ஸ்டோரிலிருந்தும், பையர்பாக்ஸ் உலாவிகளுக்காக Add-On Manager இலிருந்தும் பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த நீட்சியினை நிறுவிய பின்னரும் டுவிட்டர் தளத்தில் மாற்றம் ஏற்படவில்லையாயின் அப் பக்கத்தினை Reload செய்யவும் அல்லது Cache இனை அழித்த பின்னர் பயன்படுத்தவும்.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...