செல்ஃபிக்களை புராதன கிளாசிக் படங்களாக மாற்றத்தரும் இணையத்தளம்

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்
84Shares

தற்போது FaceApp எனும் ரஷ்ய நாட்டு அப்பிளிகேஷன் ஆனது உலக அளவில் பிரபல்யம் அடைந்து வருகின்றது.

இது இளமைக்கால புகைப்படங்களை முதிய தோற்றத்திற்கு மாற்றி தருகின்றது.

இதே போன்று செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி செல்ஃபிக்களை புராதன கிளாசிக் புகைப்படங்களாக மாற்றி தருகின்றது aiportraits.org எனும் இணையத்தளம்.

இதனை MIT - IBM Watson Al Lab உருவாக்கியுள்ளது.

இத்தளத்தில் சுமார் 45,000 வகை கிளாசிக் படங்களை மாற்றக்கூடிய வசதி காணப்படுகின்றது.

இதில் முகத்தினை Faux Oil, Water Colour மற்றும் Ink அடிப்படையிலான தோற்றத்திற்கு மாற்றுவதும் உள்ளடங்கும்.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்