டிக் டாக் செயலிக்கு மீண்டும் தடை? "ஷாக்"கில் ரசிகர்கள்!

Report Print Basu in ஆப்ஸ்

இந்தியாவில் எதிர்வரும் ஜூலை 22-ஆம் தேதி முதல் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்படும் என மத்தி தகவல் தொடர்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் 4ம் தேதி டிக்-டாக் செயலியை பதிவிறக்கம் செய்யவும் அதன் வீடியோக்களை ஊடகங்களில் ஒளிப்பரப்பவும் மத்திய அரசு தடைவிதிக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றம் கடந்த சில தினங்களுக்கு முன்பு உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவைத் தொடர்ந்து டிக் டாக் செயலி, ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டாரிலிருந்து நீக்கம் செய்யப்பட்டது.

அதனை எதிர்த்து மதுரை உயர் நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தொடரப்பட்டது. அந்த மனு, கடந்த ஏப்ரல் 24ம் தேதி நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

டிக் டாக் சார்பில், உயர் நீதிமன்றத்தின் தடைக்குப் பிறகு, டிக் டாக் செயலியில் இருந்து 6 மில்லியன் வீடியோக்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன. 18 வயதுக்கு குறைந்தவர்கள், வீடியோக்களை பதிவேற்றம் செய்ய முடியாது. பெண்களின் ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்ய முடியாது. ஆபாச வீடியோக்களை பதிவேற்றினால் டிக் டாக் செயலி தானாக செயலிழந்துவிடும் என்று உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது.

அதனையடுத்து, உயர் நீதிமன்ற நீதிபதிகள், சிறுவர், சிறுமியர், பெண்களின் ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. டிக் டாக் நிறுவனம் கொடுத்த வாக்குறுதியை மீறினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைச் சந்திக்க நேரிடும். சமூக சீர்கேட்டை உருவாக்கும் வீடியோக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது என்று நிபந்தனையுடன் டிக் டாக் செயலி மீதான தடையை நீக்கி உத்தரவிட்டனர்.

இந்நிலையில், ஜூலை 22 முதல் இந்தியாவில் டிக் டாக் மற்றும் ஹலோ செயலிக்கு தடை விதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

விதிகளுக்கு உட்பட்டு தான் இந்த செயலிகள் செயல்படுகிறதா என மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சகத்தின் 24 கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்கப்படாத பட்சத்தில் இந்த செயலி வரும் ஜூலை 22-ஆம் தேதி முதல் தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்