அதிரடியாக தடை செய்யப்பட்டது Microsoft Office 365 அப்பிளிக்கேஷன்: எங்கு தெரியுமா?

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

மைக்ரோசொப்ட் நிறுவனமானது அலுவலக ரீதியான செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக Microsoft Office எனும் மென்பொருள் பொதி ஒன்றினை அறிமுகம் செய்திருந்தது.

அதேபோன்று இப் பணிகளை ஒன்லைனில் செய்யக்கூடியவாறு Microsoft Office 365 எனும் க்ளவுட் அப்பிளிக்கேஷனையும் பின்னர் அறிமுகம் செய்திருந்தது.

இந்த அப்பிளிக்கேஷன் பாடசாலைகளிலும் மாணவர்களுக்கு கற்பிப்பதற்காக பயன்படுத்தப்பட்டு வந்தது.

இப்படியான நிலையில் தற்போது ஜேர்மனில் உள்ள பாடசாலைகளில் இந்த அப்பிளிக்கேஷனை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன் ஊடாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் விபரங்களை அமெரிக்க அதிகாரிகள் திரட்டி வருகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்தே இந்த அதிரடி முடிவை ஜேர்மன் எடுத்துள்ளது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers