பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் ஆப் என்பவற்றின் ஊடாக வன்முறைகளை தூண்டக்கூடிய பல கருத்துக்கள் பரிமாறப்பட்டு வருகின்றன.
இவற்றில் சமயங்களை அடிப்படையாகக் கொண்டும் இவ்வாறான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.
இந்நிலையில் டுவிட்டர் தளமானது மனிதாபிமானமற்ற முறையில் சமய ரீதியாக பகிரப்படும் டுவீட்களை நீக்குவதற்கு முடிவு செய்துள்ளது.
இதற்கான அறிவித்தலை நேற்றைய தினம் வெளியிட்டுள்ளது.
இதன்படி சமய ரீதியாக உருவாக்கப்பட்டுள்ள குழுக்களில் வெறுக்கத்தக்க டுவீட் செய்தால் அவை நீக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான பிரச்சினைகள் தொடர்பாக பயனர்களின் ஒத்துழைப்பை கடந்த வருடம் டுவிட்டர் நிறுவனம் எதிர்பார்த்திருந்தது.
இதன்படி 30 நாடுகளில் இருந்து 8,000 பிரதிபலிப்புக்களை டுவிட்டர் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.