உலகெங்கிலும் ஸ்தம்பித்த பேஸ்புக் வலைத்தளம் மீண்டும் வழமைக்கு திரும்பியது

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

நேற்றைய தினம் உலக அளவில் பேஸ்புக் வலைத்தளத்தில் பல வசதிகளை பயன்படுத்த முடியாமல் காணப்பட்டது.

எழுத்து வடிவிலான போஸ்ட்களை தவிர புகைப்படங்கள், வீடியோ மற்றும் ஏனைய கோப்புக்களை போஸ்ட் செய்ய முடியாமல் இருந்தது.

எனினும் சில மணிநேரத்தின் பின்னர் வழமைக்கு திரும்பியுள்ளது.

பேஸ்புக் மாத்திரமன்றி பேஸ்புக் நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படும் வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் போன்றவற்றிலும் இதே பிரச்சினைகள் எதிர்நோக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நாள்தோறும் 10 மில்லியன் டொலர்கள் வரை விளம்பரங்கள் மூலம் பணம் சம்பாதிக்கும் பேஸ்புக்கிற்கு நேற்றைய தினம் பின்னடைவாகவும் இருந்துள்ளது.

இதேவேளை இதே போன்றதொரு சம்பவம் கடந்த மார்ச் மாதமும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்