இன்ஸ்டாகிராமில் ஏற்பட்டுள்ள புதிய கோளாறு

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

பேஸ்புக் சமூகவலைத்தளத்திற்கு நிகராக வேகமாக வளர்ந்து வரும் மற்றுமொரு வலைத்தளமாக இன்ஸ்டாகிராம் விளங்குகின்றது.

புகைப்படங்களை பகிரும் இத்தளத்தில் குறைபாடு ஒன்று இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதாவது ஒரு நபரை தொடர்பவர்களின் எண்ணிக்கையை தவறாக காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் புகார் அளித்த பயனர் ஒருவர் தன்னை தொடர்பவர்களின் எண்ணிக்கை திடீரென ஒரு மில்லியனால் குறைவடைந்திருந்ததாக தெரிவித்திருந்தார்.

இப் பிரச்சினையை இன்ஸ்டாகிராம் நிறுவனமும் ஏற்றுக்கொண்டுள்ளது.

தற்போது குறித்த பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சியில் அந்நிறுவனம் இறங்கியுள்ளது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers