பயனர்களுக்கு உதவி செய்ய பேஸ்புக்கின் புதிய முயற்சி

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

கடந்த வெள்ளிக்கிமை GrokStyle எனும் நிறுவனத்தினை பேஸ்புக் நிறுவனம் விலைக்கு வாங்கியுள்ளது.

இதனைத் தொடர்ந்து பயனர்கள் பொருட்களைக் கொள்வனவு செய்யும்போது அவர்களுக்கு உதவக்கூடிய வகையில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் (AI) ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

தளபாடங்கள் மற்றும் வீட்டு அலங்காரப் பொருட்களை கொள்வனவு செய்பவர்களுக்கே இந்த செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் ஊடாக உதவி செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பேஸ்புக் நிறுவனத்தின் பேச்சாளர் Vanessa Chan கருத்து தெரிவிக்கையில் “தமது குழு ஒன்று இது தொடர்பில் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது” என தெரிவித்துள்ளார்.

இதேவேளை GrokStyle நிறுவனம் கடந்த 2015 ஆம் ஆண்டிலேயே ஆரம்பிக்கப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers