ஆப்பிள் சாதனங்களுக்காக வாட்ஸ் ஆப்பில் தரப்படும் மிகப்பெரிய பாதுகாப்பு வசதி

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

ஆப்பிளின் ஐபோன் மற்றும் ஐபேட்களில் பயன்படுத்தப்படும் வாட்ஸ் ஆப் அப்பிளிக்கேஷனை பாதுகாக்க புதிய வசதி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி Face ID அல்லது Touch ID பயன்படுத்தி வாட்ஸ் ஆப் அப்பிளிக்கேஷனை ஏனையவர்கள் பயன்படுத்தாதவாறு பாதுகாக்க முடியும்.

வாட்ஸ் ஆப்பினை செயற்படுத்தும்போது Face ID அல்லது Touch ID கொடுத்தால் மாத்திரமே உள்நுழைய முடியும்.

இதனால் தனிநபர் தகவல்கள் திருடப்படுவதோ அல்லது அனுமதியின்றி தகவல்களை கையாள்தலோ தடுக்கப்படுகின்றது.

இவ் வசதியினைப் பெறுவதற்கு வாட்ஸ் ஆப்பினை செயற்படுத்திய பின்னர்.

வலது மூலையிலுள்ள Setting பகுதிக்கு செல்ல வேண்டும்.

அதன் பின்னர் Account என்பதை தெரிவு செய்து, Open Privacy என்பதில் Screen Lock இனை தெரிவு செய்து Require Face ID என்பதை தெரிவு செய்ய வேண்டும்.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்