கமெரா பில்டர் அப்பிளிக்கேஷன்கள் அதிரடியாக நீக்கம்: வெளியானது அதிர்ச்சி காரணம்

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

அன்ரோயிட் சாதனங்களில் பயன்படுத்தக்கூடிய 29 வகையான பில்டர்கள் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளன.

குறித்த அப்பிளிக்கேஷன்களில் அன்ரோயிட் சாதனங்களுக்கு தீங்கு பயக்கக்கூடிய மல்வேர்கள் காணப்பட்டமையே இவ்வாறு நீக்கப்பட்டமைக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த பில்டர் அப்பிளிக்கேஷன்கள் பல மில்லியன் தடவைகள் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக மற்றுமொரு அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அதிலும் ஆசியாவில் அதிகர தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக இந்தியா முன்நிலை வகிப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Trend Micro எனும் இணையப் பாதுகாப்பு நிறுவனம் இந்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்