புதிய மைல்கல்லை எட்டியது வாட்ஸ் ஆப் பிஸ்னஸ் அப்பிளிக்கேஷன்

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

வாட்ஸ் அப் செயலியின் அசுர வளர்ச்சியானது வியாபாரிகள் தமது பொருட்களை விளம்பரப்படுத்துவதற்கும், விற்பனை செய்வதற்கும் பெரும் உதவியாக காணப்பட்டது.

இதனைக் கருத்தில்கொண்ட வாட்ஸ் ஆப் நிறுவனம் வர்த்தக நோக்கம் கொண்ட வாட்ஸ் ஆப் பிஸ்னஸ் எனும் அப்பிளிக்கேஷனை அறிமுகம் செய்தது.

இந்த அப்பிளிக்கேஷனும் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில் தற்போது 5 மில்லியன் பயனர்களை எட்டி வாட்ஸ் ஆப் பிஸ்னஸ் சாதனை படைத்துள்ளது.

அறிமுகம் செய்யப்பட்டு ஒருவருடம் கடந்துள்ள நிலையில் இச் சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளது.

இதேவேளை வாட்ஸ் ஆப்பினை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை உலகளவில் 1.5 பில்லியனாகவும், இந்தியாவில் மாத்திரம் 200 மில்லியனாகவும் காணப்படுகின்றது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers