பேஸ்புக் பாவனை தொடர்பில் அதிர்ச்சி தகவலை வெளியிட்ட ஆய்வு

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

பேஸ்புக் சமூகவலைத்தளத்தினை பயன்படுத்துவது பல பயனர்கள் மத்தியில் எதிரான விளைவுகளை ஏற்படுத்துவதாக பொதுவான கருத்து நிலவி வருகின்றது.

வயது வேறுபாடு இன்றி உலகளவில் பல பயனர்கள் பேஸ்புக்கிற்கு அடிமையாக இருக்கின்றனர்.

இந்நிலையில் அனைவருக்கும் எச்சரிக்கை விடும் தகவலை ஆய்வு ஒன்ற வெளியிட்டுள்ளது.

அதாவது வயது வந்தவர்கள் பேஸ்புக் பாவனைக்கு அடியமையாகியதன் பின்னர் தனிமையை உணர்வதாக குறித்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.

பேஸ்புக்கிற்கு மாத்திரமன்றி டுவிட்டரிற்கு அடிமையானவர்களிடமும் இதே உணர்வு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

18 தொடக்கம் 30 வயது வரையான 1,178 மாணவர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில்10 சதவீதமானவர்கள் தாம் எதிர்மறை அனுபவத்தை பெறுவதாகவும், 13 சதவீதமானவர்கள் தாம் தனிமையை உணர்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வினை Media Technology and Health (MTH) நிறுவனத்திற்காக Pittsburgh பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மேற்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்