அறிமுகமாகியது பேஸ்புக் மெசஞ்சரின் புதிய பதிப்பு

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

பேஸ்புக் நிறுவனமானது தனது மெசஞ்சர் அப்பிளிக்கேஷனை மீள வடிவமைத்து புதிய பதிப்பாக அறிமுகம் செய்துள்ளது.

கடந்த வருடம் இடம்பெற்ற F8 மாநாட்டில் இப் புதிய பதிப்பு தொடர்பான முதலாவது அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

குறித்த அறிவிப்புக்கு இணங்க தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இப் பதிப்பில் டேப்களின் (Tabs) எண்ணிக்கை ஒன்பதிலிருந்து மூன்றாக குறைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பயனர் இடைமுகத்தில் (User Interface) அதிகளவு பகுதி வெள்ளை நிறமாக்கப்பட்டுள்ளது.

தவிர மேலும் சில புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

கூகுளின் அன்ரோயிட் மற்றும் ஆப்பிளின் iOS சாதனங்களுக்காக இப் புதிய பதிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இப் பதிப்பினை கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப்ஸ் ஸ்டோர் என்பனவற்றிலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers