பேஸ்புக், டுவிட்டரை தொடர்ந்து இன்ஸ்டாகிராமிற்கு வந்த சோதனை

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

உலகின் முன்னணி சமூகவலைத்தளங்களான பேஸ்புக் மற்றும் டுவிட்டர் என்பவற்றில் பல போலிக் கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதனால் ஏனைய பயனர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தடுக்க இரு நிறுவனங்களும் போலிக் கணக்குகளை நீக்கி வருகின்றன.

இதேபோன்று இன்ஸ்டாகிராமிலும் ஒரு பிரச்சினை விஸ்வரூபமெடுத்து வருகின்றது.

அதாவது போலியான லைக் மற்றும் கொமண்ட் என்பன இடப்பட்டு வருகின்றது.

இதற்காக மூன்றாம் நபர் அப்பிளிக்கேஷன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

எனவே இப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக இன்ஸ்டாகிராம் நிறுவனம் அதிரடி நடவடிக்கை ஒன்றினை எடுக்கவுள்ளது.

இதன்படி மூன்றாம் நபர் மென்பொருட்களை இனங்காணக்கூடிய டூல் ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளது.

குறித்த டூலானது போலியான லைக் மற்றும் கொமண்ட்களை தானாகவே நீக்கிவிடும்.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers