இன்றைய தினம் பேஸ்புக்கின் மெசஞ்சர் சேவை ஸ்தம்பிதம் அடைந்திருந்ததாக பல பயனர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பயனர்களே அதிகமாக புகார் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவலை DownDetector.com இணையத்தளம் வெளியிட்டுள்ளது.
சில மணித்தியாலங்கள் நீடித்திருந்த ஸ்தம்பித நிலை மீண்டும் சரிசெய்யப்பட்டுள்ளது.
ஆனாலும் குறித்த ஸ்தம்பித நிலைக்கு பின்னால் உள்ள காரணத்தினை பேஸ்புக் நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை.
எவ்வாறெனினும் கடந்த செப்டெம்பர் மாதத்தில் மாத்திரம் பேஸ்புக் மெசஞ்சர் பல தடவைகள் ஸ்தம்பித்திருந்ததாகவும், அண்மைக்காலமாக இவ்வாறான பிரச்சினை ஏற்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.