பேஸ்புக் நிறுவனமானது இந்த வருடத்தின் ஆரம்பத்தில் Watch Party எனும் வசதியினை பயனர்களுக்காக அறிமுகம் செய்திருந்தது.
இவ் வசதியின் ஊடாக பேஸ்புக் குழுவில் உள்ளவர்கள் அனைவரும் குறித்த வீடியோவினை ஒரே நேரத்தில் பார்த்து மகிழ முடியும்.
அதாவது ஒருவர் பார்ட்டி ஒன்றினை பார்வையிடும்போது அது தொடர்பில் அக் குழுவிலுள்ள அனைவருக்கும் நோட்டிபிக்கேஷன் அனுப்பப்படும்.
நோட்டிபிக்கேஷனை அடிப்படையாகக் கொண்டு குழுவிலுள்ள விரும்பிய நபர்கள் தாமும் இணைந்து அப் பார்ட்டியை பார்வையிட முடியும்.
இப்படியிருக்கையில் பேஸ்புக் மெசஞ்சரில் Watch Videos Together எனும் வசதியினை அறிமுகம் செய்யவுள்ளது.
இவ் வசதியின் உடாக சட்டிங்கில் இணைந்திருக்கும் நண்பர்கள் அனைவரும் ஒரு வீடியோவை ஒரே நேரத்தில் பார்வையிட முடியும்.
தற்போது இவ் வசதி பரீட்சார்த்த ரீதியில் காணப்படுகின்றது.
எனவே விரைவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.