பேஸ்புக் பாவனை தொடர்பில் அமுலுக்கு வரும் புதிய நடைமுறை

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

ஒரு தசாப்த காலத்தில் மேலாக உலகளவில் நண்பர்களையும், உறவினர்களையும் இணைக்கும் உன்னதமான சேவையை பேஸ்புக் வழங்கிவருகின்றது.

ஆனாலும் கடந்த சில வருடங்களாக இத் தளமானது பல பிரச்சினைகளுக்கு காரணமாக மாறியுள்ளது.

குறிப்பாக கலவரத்தை தூண்டுதல் மற்றும் தீவிரவாத கொள்கைகளை பரப்புதல் போன்றன முக்கியமானவையாக பார்க்கப்படுகின்றது.

இவ்வாறான பிரச்சினைகளை தடுப்பதற்கு பேஸ்புக் நிறுவனம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையில் தமது நிறுவனம் எதிர்காலத்தில் பதிவிடப்படும் உள்ளடக்கங்களை உன்னிப்பாக அவதானித்து பாதிப்பு ஏற்படுத்தும் பதிவுகளை நீக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக நிறுவுனர் மார்க் ஷுக்கர் பேர்க் தெரிவித்துள்ளார்.

இதற்காக மேம்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தற்போது 99 சதவீதமான பயங்கரவாத கொள்கை கொண்ட பதிவுகள் நீக்கப்படுவதாகவும், இதற்காக 200 நபர்களைக் கொண்ட ஒரு குழு செயற்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்