பயனர்களின் கைப்பேசிகளுக்கு ஸ்பாம் செய்திகளை அனுப்பிய டுவிட்டர்: தகவல் திருட்டிற்கு அடித்தளமா?

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

சில தினங்களுக்கு முன்னர் நீண்ட இலக்க தொடரினைக் கொண்ட குறுஞ்செய்திகள் டுவிட்டர் தளத்திலிருந்து பயனர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

ரகசிய குறியீடுகளைக் கொண்ட இச் செய்தியானது உலகளவில் பரந்துபட்டு பல பயனர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இப் பிரச்சினை தொடர்பாக பல பயனர்கள் தமது டுவிட்டர் தளத்தில் கருத்து வெளியிட்டுள்ளனர்.

அண்மைக் காலமாக சமூக வலைத்தளங்கள் ஊடாக தகவல் திருட்டு இடம்பெற்று வருவது அதிகரித்துள்ளது.

இதனால் தற்போது அனுப்பப்பட்டுள்ள ரகசியக் குறியீட்டு குறுஞ்செய்தியானது பயனர்களை அச்சமடையச் செய்துள்ளது.

எனினும் சில நிமிட இடைவெளியில் Twitter is "On It" என்ற தகவலும் அனுப்பப்பட்டுள்ளது.

இதன் கருத்தானது குறித்த குறைபாடு விரைவில் நீக்கப்படும் என்பதாகும்.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்