டிரம்ப் ஆதரவாளர்களுக்கான தனி டேட்டிங் செயலி: முதல் நாளில் பயனர்களுக்கு நேர்ந்த சோகம்

Report Print Arbin Arbin in ஆப்ஸ்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் ஆதரவாளர்களர்களுக்கு மட்டு என தொடங்கப்பட்ட பிரத்யேக டேட்டிங் செயலியின் பயனர்கள் தகவல்கள் அனைத்தும் திருடுபோயுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றதில் இருந்து தொடர்ச்சியாக ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் கிண்டல் செய்யப்படுபவர் டொனால்ட் டிரம்ப்.

இவரோடு சேர்த்து இவருடைய ஆதரவாளர்களும் சமூக வலைதளங்களில் கேலிக்கு உள்ளாகினர்.

இதற்குத் தீர்வுகாண வேண்டும் என நினைத்த எமிலி மொரினோ, டிரம்ப்பின் ஆதரவாளர்களுக்கு மட்டும் பிரத்தியேகமாக டேட்டிங் செயலி ஒன்றை நேற்று தொடங்கினார். இதன் பெயர் டொனால்ட் டேட்டர்ஸ்.

டிரம்ப்பின் அரசியல் முழக்கமான 'Make America Great Again' என்பதுபோல, 'Make America Date Again' என்பதுதான் இதன் முழக்கமே.

இப்படி டிரம்ப்பின் தொண்டர்கள் டேட் செய்யவேண்டும் எனத் தொடங்கப்பட்ட இந்த செயலியில் முதல்நாளே பயனர்களின் டேட்டா பலவும் லீக் ஆகிவிட்டன.

சுமார் 1,600 பேர் இந்த செயலியை முதல்நாளில் பயன்படுத்தியிருக்கின்றனர். இவர்களின் விவரங்கள் அனைத்தையும் பிரபல ஹேக்கரான எலியட் மிக எளிதில் பெற்றிருக்கிறார்.

இதனை எலியட், செயலி நிறுவனத்துடன் டுவிட்டரில் தெரிவிக்கவே உடனடியாக பாதுகாப்புக் குறைபாடு கண்டறியப்பட்டுச் சரிசெய்யப்பட்டுவிட்டது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers