உங்களையும் விண்வெளி வீரராகக் காட்டிக்கொள்ள நாசா வெளியிடும் அப்பிளிக்கேஷன்

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்
78Shares
78Shares
ibctamil.com

நம்மில் பெரும்பாலோனோர் விண்வெளிக்கு ஒருபோதும் போகப் போவதில்லை.

நம்மில் எவரும் விண்வெளி நட்சத்திரக் கூட்டங்களுக்கும் செல்லப்போவதில்லை.

ஆனால் நாம் கனவு காண முடியும். மேலும் தற்போது நாம் நட்சத்திர திடலின் அழகான இடங்களில் படம் பிடிக்க முடியும்.

இதற்காக நாஸாவுக்கு நன்றி சொல்லித்தான் ஆக வேண்டும்.

Spitzer Space Telescope இன் 15 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அதனைக் கொண்டாடும் விதமாக, நாசா iOS மற்றும் Android தொலைபேசி செயலி ஒன்றை வெளியிட்டுள்ளது.

தொலைபேசியின் முன் மற்றும் பின் கமெராக்களைப் பயன்படுத்தி உங்களது முகத்தை தரப்பட்டுள்ள கட்டத்துக்குள் மையப்படுத்திப் படம்பிடிப்பதன் மூலம் அது விண்வெளி வீரருடைய தலைக் கவசத்தினுள் உள்ளிடப்படுகிறது.

பின்னர் உங்களுக்கு விரும்பிய பிண்னணியை 15 வருடங்களாக Spitzer படம்பிடித்திருந்த படங்களைப் பயன்படுத்தி நீங்கள் தெரிவுசெய்து கொள்ள முடியும்.

இச் செயலியை ஐடியூன்ஸ் மற்றும் பிளே ஸ்டோர் என்பவற்றிலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்