FDA இனால் அங்கீகரிக்கப்பட்ட முதல் கருத்தடை செயலி

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

கருத்தடைக்கென ஒரு செயலி உருவாக்கப்பட்டுள்ளது, இதை FDA உம் அனுமதித்திருக்கின்றது.

கடந்தவாரம் Natural Cycles ஆனது அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட முதல் கருத்தை செயலியாக தன்னைப் பதிவுசெய்துள்ளது.

இது ஒரு பெண் வழங்கும் மாதவிடாய் சக்கரத்தின் அடிப்படையில் மற்றும் உடல் வெப்பநிலை தகவல்களின் அடிப்படையில் அப் பெண் மாதத்தின் எந்த நாள் கருத்தரிக்கும் வாய்ப்புள்ளது என்பதை சொல்லிவிடுகிறது.

இது பெண்ணின் மாதவிடாய் சக்கரத்தின் கருத்தரிக்கும் நாட்களை அடையாளங்காண உதவுகின்றது.

இச் செயலியைப் பயன்படுத்தும் பெண்கள் தினமும் காலையில் எழுந்தவுடன் அடிப்படை உடல் வெப்பமானியைக் கொண்டு உடல் வெப்பநிலையை அளவிடல் வேண்டும். இவ் வெப்மானி மேற்டி செயலியுடன் வழங்கப்படுகிறது.

கருத்தடை மாத்திரைகளுக்கான தோல்வி விகிதம் 9 வீதம், ஆனால் இச் செயலிப் பயன்பாட்டில் இது 6.5 வீதமாகக் காணப்பட்டிருந்தது.

எனினும் விதந்துரைக்கப்பட்ட விதிகளுக்கேற்ப செயற்பட்டவர்களில் இவ் விகிதம் 1.8 வீதமாகக் காணப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers