கேரளா வெள்ளம்: காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க கூகுளின் ஆப்

Report Print Jayapradha in ஆப்ஸ்

உலகின் முக்கிய நிறுவனங்களில் ஒன்றான கூகுள் கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக தொலைத்தொடர்பிலிருந்து துண்டிக்கப்பட்டவர்கள் மற்றும் காணாமல் போனவர்களைக் கண்டறிவதற்காக புதிய அப்ளிகேஷன் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

மேலும் இந்த அப்ளிகேஷனை அனைவரும் அவர்களின் கம்யூட்டர் மற்றும் கைப்பேசிகளில் பயன்படுத்துவதற்கான வசதியும் உள்ளது.

உபயோகிக்கும் முறை:

முதலில் கூகுள் தேடுதல் பக்கத்தில் http://google.org/personfinder என்று பதிவிட வேண்டும்.

பின்பு மேலே கொடுக்க பட்டுள்ள படத்தில் உள்ள google person finder என்பதை கிளிக் செய்யவும்.

அதனை கிளிக் செய்தவுடன் அதில் kerala flooding என்ற ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும்.

மேலும் வெள்ளத்தில் காணமல்போனவர்களைப் பற்றி தகவல் தெரிந்துகொள்ள விரும்பினால் அவரது பெயர் மற்றும் அவரது இருப்பிடத்தைக் குறிப்பிட்டு அவரது பாதுகாப்பு தொடர்பான தகவலைப் பெறலாம்.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers