அந்தரங்க தகவல்களை திருடும் Track View! தப்பிப்பது எப்படி?

Report Print Fathima Fathima in ஆப்ஸ்

இன்றைய தொழில்நுட்ப உலகில் ஸ்மார்ட்போன் இல்லாமல் அணுவும் அசையாது என்ற நிலை தான்.

எது இருக்கிறதோ இல்லையோ ஸ்மார்ட்போன்கள் இருந்தால் போதும் என்ற நிலைக்கு இளசுகள் வந்துவிட்டனர்.

அதுவும் புதுப்புது ஆப்களை தரவிறக்கம் செய்து பயன்படுத்துவதே பேஷனாகிவிட்டது, இதனால் நன்மைகள் இருந்தாலும் ஆபத்துகள் மிக அதிகம்.

கடந்த இரண்டு நாட்களாக Track View செயலி மூலம் சகோதரி, உறவுக்கார பெண்கள், தோழிகள் என அந்தரங்க படங்கள், வீடியோக்களை எடுத்து மிரட்டி வந்த தினேஷ்குமார் என்ற வாலிபர் பிடிபட்டார்.

இந்த தகவல் அதிர்ச்சி அளித்தாலும், இதுபோன்ற ஆப்களில் இருந்து பெண்கள் தங்களை தற்காத்துக் கொள்வது பற்றி நிச்சயம் அறிந்திருக்க வேண்டும்.

எந்தவொரு ஆப்பை தரவிறக்கம் செய்யும் போதும் முதலில் கேட்கப்படும் Access-களுக்கு நாம் ஓகே சொன்ன பின்னரே பயன்படுத்த முடியும்.

இதனால் நாமே முன்வந்து தகவல்களை திருடுவதற்கு அனுமதி அளிக்கும் விதமாக உள்ளது எனவும் எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.

அனுமதி கொடுக்கும்போது நமது மொபைலில் இருக்கும் தொடர்பு எண்கள், புகைப்படங்கள், வீடியோக்கள், தகவல்கள் எனப் பலவற்றையும் சேர்த்து ஆப்ஸ் எடுத்துக்கொள்கின்றன.

Track View செயலியின் மூலம் அடுத்தவரின் மொபைலை டிராக் செய்ய முடியும், இதிலுள்ள Recording ஆப்ஷன் மூலம் மற்றவரின் மொபையில் நடக்கும் விடயங்களை Record செய்து கொள்ளலாம்.

அவர் எந்த இடத்தில் இருக்கிறார், என்ன பேசுகிறார் என்பது முதற்கொண்டு தகவல்கள் பெறலாம்.

Push To Talk என்ற ஆப்ஷனை பயன்படுத்தி நாம் பேசினாலும், தகவல் மட்டும் சென்றடையுமே தவிர யார் பேசுகிறார்கள் என்பது அவர்களுக்கு தெரியாது.

எனவே இதிலிருந்து பாதுகாத்து கொள்ள, முன்பின் தெரியாத நபர்களிடம் பெண்கள் தங்களது ஸ்மார்ட்போன்களை எக்காரணம் கொண்டு கொடுக்க வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறது.

புது மொபைல் வாங்கினாலும் Play Store-ல் Settings ஆப்ஷனில் Play Protect-யை கிளிக் செய்வதன் மூலம் எந்த மாதிரியான ஆப்ஸ்கள் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

ஒருவேளை உங்களது மொபைலில் ஆப்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தாலும் இதன்மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இதை வைத்து உங்களுக்கு தேவையில்லாத ஆப்களை அழித்துவிட முடியும்.

மேலும் settings ல் App Permission என்ற ஆப்சனில் சென்று எந்தெந்த ஆப் எந்தெந்த தகவல்களை பார்த்து கொண்டிருகிறது என்பதையும் அறிந்து அந்த தகவல்கள் அந்த ஆப்க்கு தேவையில்லை என்றால் permission ஐ நீக்கிவிடலாம்.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers