Snapcash வசதியினை அதிரடியாக நிறுத்துகின்றது Snapchat

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

Snapchat நிறுவனத்தினால் தனது பயனர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்ற பணப்பரிமாற்ற சேவையே Snapcash ஆகும்.

இதன் ஊடாக நண்பர்களுக்குள் ஒன்லைன் பணப்பரிமாற்றத்தினை மாத்திரம் செய்ய முடியும்.

இச் சேவையினை எதிர்வரும் ஆகஸ்ட் 30ம் திகதி முதல் நிறுத்துவதற்கு Snapchat நிறுவனம் தீர்மானித்துள்ளது.

Snapchat நிறுவனத்தின் பயனர்களின் எண்ணிக்கை அண்மைக்காலமாக குறைவடைந்து வருகின்றது.

இப் பயனர்கள் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் கூகுள் நிறுவனத்தின் வலைத்தளங்கள் என்பவற்றினை நோக்கிய செல்வதன் காரணமாக Snapchat இன் பயனர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைவடைந்துள்ளது.

அதேநேரம் குறைவடையும் பயனர்களின் எண்ணிக்கையினை அதிகரிப்பதற்கு Snapchat நிறுவனமும் முறையான திட்டங்களை வகுக்கவில்லை.

இதன் காரணமாகவே மேற்கண்ட சேவையினை நிறுத்த முடிவெடுத்துள்ளதாக அந்நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers