வாட்ஸ் ஆப் பாவனையாளர்களுக்கு ஓர் அதிர்ச்சி செய்தி

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

உலக அளவில் அதிகமாக பயன்படுத்தப்படுகின்ற குறுஞ்செய்தி செயலியாக வாட்ஸ் ஆப் விளங்குகின்றது.

இதனால் இச் செயலியின் ஊடாக வதந்திகளும் அதிகளவில் வேகமாக பரப்பப்படுகின்றன.

இதனை தடுப்பதற்கு சில நடவடிக்கைகளை வாட்ஸ் ஆப் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

இதன் ஒரு அங்கமாக ஒரு செய்தியை ஐந்து நபர்களுக்குள் மாத்திரமே ஷேர் செய்யக்கூடியதாக மட்டுப்படுத்துவதை பரிசீலணை செய்து வருகின்றது.

எனினும் இக் கட்டுப்பாடானது இந்தியாவிற்கு மாத்திரமே காணப்படும்.

எவ்வாறெனினும் தற்போது 250 நபர்கள் வரை ஷேர் செய்யக்கூடிய வசதியை தரும் வாட்ஸ் ஆப் ஆனது உலக அளவிலும் 20 பேர் வரைக்குள் மட்டுப்படுத்த தீர்மானித்துள்ளது.

250 மில்லியன் பயனர்கள் காணப்படும் இந்தியாவிலேயே அதிக அளவில் வதந்திகள் வாட்ஸ் ஆப் ஊடாக பரப்பப்டுகின்றது.

இதன் காரணமாக இந்தியாவில் மாத்திரம் கட்டுப்பாடு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers