ஒரு பில்லியன் பயனர்களை எட்டிய பின்னர் இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்த புதிய வசதி

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

சில தினங்களுக்கு முன்னர் இன்ஸ்டாகிராம் தளத்தினைப் பயன்படுத்தும் பயனர்களின் எண்ணிக்கை 1 பில்லியனை எட்டியிருந்தது.

இதனைத் தொடர்ந்து IGTV எனும் புதிய வசதியினை இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்துள்ளது.

இவ் வசதியின் ஊடாக பயனர்கள் வீடியோக்களை அப்லோட் செய்துகொள்ள முடியும்.

இதன் ஊடாக பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்கள் ஒரு மணிநேரம் வரை நீளம் கொண்டதாக இருக்க முடியும்.

அத்துடன் குறித்த வீடியோக்களை முழுமையான திரை வடிவத்தில், செங்குத்தான தோற்றத்தில் பார்த்து மகிழ முடியும்.

மேலும் அன்ரோயிட், iOS சாதனங்களில் இதற்கான அப்பிளிக்கேஷன்களை நிறுவி பயன்படுத்த முடியும்.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers